yesuvin anbai

இயேசுவின் அன்பை மறந்திடுவாயோ 
மறந்திடுவாயோ மனிதப் பண்பிருந்தால் 
இயேசுவின் அன்பை 
மறந்திடாதிருக்க நீ சிலுவையிலே அவர் மரித்துத் 
தொங்கிடும் காட்சி மனதில் நில்லாதோ 

அளவில்லா அன்பு அதிசய அன்பு 
அழமகலம் நீளம் எல்லை காணா அன்பு
களங்கமில்லா அன்பு கருணை சேர் அன்பு --2
கல்வாரி மலை எங்கும் கதறிடும் அன்பு 

அலைகடலை விட பரந்த பேரன்பு
அன்னைமார் அன்பெல்லாம் திரையிடும் அன்பு 
மலைபோல் எழுந்தென்னை வளைத்திடுமன்பு -- 2
சிலையென பிரமையில் நிறுத்திடுமன்பு 

எனக்காக மனுவுரு தரித்த நல்லன்பு 
எனக்காக தன்னையே உணவாக்கும் அன்பு 
எனக்காக பாடுகள் ஏற்ற பேரன்பு -- 2
எனக்காக உயிரையே தந்த தேவன்பு


yesuvin anbai maranthiduvaayo
maranthiduvaayo manithap panbirunthaal
yesuvin anbai
maranthidaathirukka nee siluvaiyilae avar mariththu
thongidum kaatchi manathil nillaatho

alavilla anbu athisaya anbu
aazham agalam neelam ellai kaanaa anbu
kalangamilla anbu karunai saer anbu - 2
kalvaari malai engum katharidum anbu

alaikadalai vida parantha paeranbu
annaimaar anbaellaam thiraiyidum anbu - 2 
malai pol ezhunthaennai valaithidum anbu
silaiyena biramaiyil niruthidum anbu

enakkaaga manuvuru tharitha nallanbu
enakkaaga thannaiyae unavaakkum anbu
enakkaaga paadugal aetra paeranbu
enakkaaga uyiraiyae thantha thaevanbu


Naan unnai vittu vilaguvathillai

நான் உன்னை விட்டு விலகுவதில்லை 
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை 
நான் உன்னை காண்கின்ற தேவன் 
கண்மணி போல் உன்னை காப்பேன்

பயப்படாதே நீ மனமே - நான் 
காத்திடுவேன் உன்னை தினமே 
அற்புதங்கள் நான் செய்திடுவேன் 
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன் 

திகையாதே கலங்காதே மனமே - நான் 
உன்னுடனிருக்க பயமேன் 
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்  - உன் 
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்


naan unnai vittu vilaguvathillai
naan unnai endrum kaividuvathillai
naan unnai kaankindra thevan
kanmani pol unnai kaappaen

payappadathe nee maname - naan
kaathiduven unnai thiname
arputhangal naan seythiduven
unnai athisayamaai naan nadathiduven

thigaiyaathe kalangaathe maname - naan 
unnudanirukka bayamaen
kanneer yaavayum thudaiththiduven - un 
kavalaigal yaavaiyum pokkiduven

Thaayku anbu vatripoguma

தாய்க்கு அன்பு வற்றிப் போகுமா 
தனது பிள்ளை அவள் மறப்பாளோ 
தாய் மறந்தாலும் நான் மறவேனே 
தயவுள்ள நம் கடவுள் தான் உரைத்தாரே 

குன்று கூட அசைந்து போகலாம் 
குகைகள் கூட பெயர்ந்து போகலாம் 
அன்பு கொண்ட எந்தன் நெஞ்சமே 
அசைவதில்லை பெயர்வதில்லையே 

தீ நடுவே நீ நடந்தாலும் 
ஆழ்கடலை தான் கடந்தாலும் 
தீமை ஏதும் நிகழ்வதில்லையே 
தீதின்றியே காத்திடுவேன் நான் 

கழுகின் சிறகில் குஞ்சை அமர்த்தியே 
கனிந்த அன்பில் சுமந்து செல்லுமே 
கழுகை போல நான் உனைத்தானே 
காலமெல்லாம் சுமந்து செல்வேனே 

thaaykku anbu vatri poguma
thanathu pillai aval marappaalo
thaay maranthaalum naan maravenae
thayavulla nam kadavul thaan uraithaare

kundru kooda asainthu pogalaam
kugaikal kooda peyarnthu pogalaam
anbu konda enthan nenjamae
asaivathillai peyarvathillayae

thee naduve nee nadanthaalum
aazhkadalai thaan kadanthaalum
theemai aedhum nigazhvathillaiyae
theethindriyae kaathiduven naan

kazhugin sirakil kunjai amarthiyae
kanintha anbil sumanthu sellumae
kazhugai pola naan unaithaanae
kaalamellaam sumanthu selvaenae

Un thiruyaazhil en iraiva

உன் திருயாழில் என் இறைவா 
பல பண் தரும் நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே 
அதில் இணைத்திட வேண்டும் இசையரசே 

யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த 
ஏழையின் இதயம் துயில் கலையும் 
யாழிசை கேட்டு தனை மறந்து உந்தன் 
ஏழிசையோடு இணைத்திடுமே

விண்ணக சோலையில் மலரெனவே - திகழ் 
எண்ணில்லா தாரகை உமக்குண்டு
உன்னருட்பேரொளி நடுவினிலே - நான் 
என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன்


un thiruyaazhil en iraiva
pala pantharum narambundu
ennaiyum oor siru narambaenave
athil inaithida vaendum isaiyarase

yaazhinai neeyum meettukaiyil intha 
aezhaiyin idhayam thuyil kalaiyum
yaazhisai kaettu thanai maranthu unthan
aezhisaiyodu inathidume

vnnaga solaiyil malarenave - thigazh
ennillaa thaaragai umakkundu
unnarutperoli naduvinilae - naan
en siru vilakkaiyum aetriduven

Isai ondru isaikkindren

இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா 
எளிய குரல் தனிலே - என்
இதய துடிப்புக்களோ - என் 

இசையின் குரலுக்கு தாளங்களே 

காலத்தின் குரல் தனில் தேவா - உன் 
காலடி ஓசை கேட்கின்றது 
ஆதியும் அந்தமும் ஆகினாய் -- 2 
மழலையின் சிரிப்பினில் உன் எழில் வதனம் 
மலர்ந்திடும் மண்ணிலே 

ஏழையின் வியர்வையில் இறைவா - உன் 
சிலுவை தியாகம் தொடர்கின்றது 
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட -- 2
உழைக்கும் கரங்கள் ஒன்றென 
இணைவது விடியலின் ஆரம்பம்


isaiyondru isaikkindren iraiva
eliya kural thanilae - en 
idhaya thudippukalo - en
isaiyin kuralukku thaalangalae

kaalathin kuralthanil theva - un
kaaladi oosai kaetkindrathu
aathiyum andhamum aaginaay - 2
mazhalaiyin sirippil un ezhil vathanam
malarnthidum mannilae

aezhaiyin viyarvaiyil iraivaa - un
siluvai thyaagam thodargindrathu
samathuvam emmil vaazhnthida - 2 
uzhaikkum karangal ondrena
inaivathu vidiyalin aarambam

amaithiyin thoothanaay

அமைதியின் தூதனாய் என்னையே மாற்றுமே 
அன்பனே இறைவனே என்னிலே வாருமே 

பகைமையுள்ள இடத்தில் பாசத்தை வளர்க்கவும் 
வேதனை நிறைந்த மனதில் மன்னிப்பு வழங்கவும் 
கலக்கம் அடையும் வாழ்வில் நம்பிக்கை ஊட்டவும் 

தளர்ச்சி ஓங்கும் போது மனதிடம் தழைக்கவும் 
இருளே சூழும் வேளை ஒளியை ஏற்றவும் 
துயரம் வாட்டும் நேரம் உதயம் காணவும்


amaithiyin thoothanaay ennaiyae maatrumae
anbane iraivanae ennilae vaarume

pagaimaiyulla idathil paasathai valarkavum
vethanai nirantha manathil mannippu vazhangavum
kalakkam adaiyum vaazhvil nambikkai oottavum

thalachchi oogum pothu manathidam thazhaikkavum
irulae soozhum vaelai oliyai aetravum
thuyaram vaattum neram uthayam kaanavum

Nee enthan paarai

நீ எந்தன் பாறை என் அரணான இயேசுவே
நீ எந்தன் உள்ளத்தின் அணையாத தீபமே 
அணையாத தீபமே இயேசுவே இயேசுவே 

ஒளி கொண்டு தேடினால் இருள் நில்லுமோ 
உன் துணையின் வாழ்க்கையில் துயர் வெல்லுமோ 
தடை கோடி வரலாம் உள்ளம் தவித்தோடி விடலாம் 
ஆனாலும் உன் வார்த்தை உண்டு - எது 
போனாலும் உனில் தஞ்சம் உண்டு 
இயேசுவே இயேசுவே -- 2

இரவுக்கும் எல்லை ஊர் விடியல் அன்றோ
முடிவாக வெல்வதும் நன்மையன்றோ 

தளராது வாழ்வோம் அருள் அணையாது காப்போம் 
என்றென்றும் உன் ஆசிகொண்டு-  வரும் 
நல் வாழ்வை கண்முன்னே கண்டு
இயேசுவே இயேசுவே -- 2

nee enthan paarai en aranaana yesuve
nee enthan ullaththin anaiyaatha theepame
anaiyaatha theepame yesuve yesuve

oli kondu thedinaal irul nillumo
un thunaiyin vaazhkaiyil thuyar vellumo
thadai kodi varalaam ullam thavithodi vidalaam
aanaalum un vaarthai undu - edhu 
ponaalum unil thanjam undu
yesuve yesuve - 2 

iravukum ellai or vidiyal andro
mudivaaga velvathum nanmaiyandro
thalaraathu vaazhvom arul anaiyaathu kaappom
endredrum un aasi kondu - varum
nal vaazhvai kanmunnae kandu
yesuve yesuve - 2 

Kalaimaangal neerodai thedum

கலைமான்கள் நீரோடை தேடும்
எந்தன் இதயம் இறைவனை நாடும் 
உள்ளத் தாகம் உந்தன் மீது 
கொண்ட போது எனக்கு 
வேறென்ன வேண்டும் - மான்கள் நீரோடை தேடும்

காலம் தோன்றா பொழுதினிலே 
கருணையில் என்னை நீ நினைத்தாய் 
உயிரை தந்திடும் கருவினிலே 
அருளினை பொழிந்து அரவணைத்தாய் 
குயவன் கையாலே மண்பாண்டம் உடைந்திடும் 
கதையின் நாயகன் நான் இன்று 

பாறை அரணாய் இருப்பவரே 
நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் 
காலை மாலை அறியாமல் 
கண்ணீர் வடித்திடும் நிலையானேன் 
சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால் 
அழகிய மணிமாலை நான் ஆவேன் 

kalaimaangal neerodai thedum
enthan idhayam iraivanai naadum
ullathaagam unthan meethu
konda podhu enakku
vaerenna vaendum - maangal neerodai thedum

kaalam thondra pozhuthinile
karunaiyil ennai nee ninaithaay
uyirai thandhidum karuvinile
arulinai pozhinthu aravanaithaay
kuyavan kaiyaale manpaandam udainthidum
kathaiyin naayagan naan indru

paarai aranaay iruppavare
norungiya idhayam naan sumanthen
kaalai maalai ariyaamal
kanneer vadithidum nilaiyaanen
sithariya manigalai korthu eduthaal
azhagiya manimaalai naan aaven

Kalaimaan neerodaiyai

கலைமான் நீரோடையை ஆர்வமாய் 
நாடுதல் போல்
இறைவா என் நெஞ்சம் மறவாது - உன்னை 
ஏங்கியே நாடி வருகின்றது

உயிருள்ள இறைவனில் தாகம் கொண்டலைந்தது 
இறைவா உன்னை என்று நான் காண்பேன் 
கண்ணீரே எந்தன் உணவானது 

மக்களின் கூட்டத்தோடு விழாவில் கலந்தேனே 
அக்களிப்போடு இவற்றை நான் நினைக்க 
என் உள்ளம் பாகாய் வடிகின்றது

kalaimaan neerodaiyai aarvamaay
naaduthal pol
iraivaa en nenjam maravaathu - unnai
aengiyae naadi varugindrathu

uyirulla iraivanil thaagam kondalainthathu
iraivaa unnai endru naan kaanben 
kanneerae enthan unavaanathu

makkalin koottathodu vizhaavil kalanthaene
akkalippodu ivatrai naan ninaikka
en ullam paakaay vadikindrathu 

En aatralin aandavarai

என் ஆற்றலின் ஆண்டவரை - நான்
எந்நாளும் போற்றிடுவேன் - நல் 
அருள் மொழி கேட்க காலமெல்லாம் அவர் 
காலடி அமர்ந்திடுவேன் 

ஆண்டவர் எனது அரணாவார் - அவரே 
எனக்கென்றும் துணையாவார் 
வலிமையையும் வாழ்வும் வழங்கும் நல் தேவன் 
என்னுடன் இருக்கின்றார் 
என்றும் இருக்கின்றார் 

ஆண்டவர் எனது மீட்பானார்  - அவரே 
எனக்கென்றும் ஒளியாவார்
வாழ்வாய் வழியாய் விளங்கும் நல் தேவன் 
சீர்வழி நடத்திடுவார் 
அவர்வழி தொடர்ந்திடுவேன்

en aatralin aandavarai - naan
ennaalum potriduven - nal 
arul mozhi kaetka kaalamellaam avar
kaaladi amarnthiduven

aandavar enathu aranaavaar - avarae
enakkendrum thunaiyaavaar
valimaiyum vaazhvum vazhangum nal thevan
ennudan irukkindraar
endrum irukkindraar

aandavar enathu meetpanaar - avare
enakkendrum oliyaavaar
vaazhvaay vazhiyaay vilangum nal thevan
seervazhi nadathiduvaar
avar vazhi thodarnthiduven

en aayanaam iraivan irukkindrapothu

என் ஆயனாம் இறைவன் இருக்கின்ற போது 
என் வாழ்விலே குறைகள் என்பது ஏது 

என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே

என்றும் இன்பம் ஆகா என்றும் இன்பம் 
ஆகா என்றென்றும் இன்பமல்லவா 

என்னோடவர் நடந்திடும் போதினிலே 
எங்கே இருள் படர்ந்திடும் பாதையிலே 
எங்கும் ஒளி ஆகா எங்கும் ஒளி 
ஆகா எங்கெங்கும் ஒளி அல்லவா 

en aayanaam iraivan irukkindra pothu
en vaazhvilae kuraigal enbathu aethu

ennai avar pasumpul boomiyile
enneramum nadathidum pothinile
endrum inbam ahaa endrum inbam
ahaa endrendrum inbamallava

ennodavar nadanthidum pothinilae
enge irul padarnthidum paathaiyile
engum oli ahaa engum oli 
ahaa engengum oli allavaa

iraivan enathu meetpaanaar

இறைவன் எனது மீட்பானார் 
அவரே எனக்கு ஒளியானார் 
அவரைக்  கொண்டு நான் வாழ 
எவரைக் கண்டும் பயமில்லை

வாழ்வில் இறைவன் துணையானார் 
வாடும் எனக்கு உயிரானார் 
தீயோர் என்னை வளைத்தாலும் 
தீமை அணுக விடமாட்டார் 

தீயோர் படைபோல் சூழ்ந்தாலும் 
தீராப் பகையைக் கொண்டாலும் 
தேவன் அவரைத் திடமாக 
தேடும் எனக்கு குறையேது 

iraivan enathu meetpaanaar
avarae enaku oliyaanaar
avaraik kondu naan vaazha
evarai kandum bayamillai

vaazhvil iraivan thunaiyaavaar
vaadum enakku uyiraanaar
theeyor ennai valathaalum
theemai anuka vidamaattaar

theeyor padaipol soozhthaalum
theeraap pakaiyai kondaalum
thevan avarai thidamaaga
thedum enaku kuraiyaethu

vaigarai pozhuthin

வைகறை பொழுதின் வசந்தமே நீ வா 
விடியலை தேடும் விழிகளில் ஒளி தா 
வாழ்வு மலர்ந்திட வான் மழையென வா 
வழி இருள்தனிலே வளர்மதி என வா  - இங்கு 
பாடும் இந்த ஜீவனிலே பரமனே நீ வா 

அலைகளில்லா கடல் நடுவே பயணமென என் வாழ்வு 
அமைதியெங்கும் அமைதியென பயணமதை நான் தொடர 
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா

இடர்வரினும் துயர்வரினும் இன்னுயிர்தான் பிரிந்திடினும் 
இணைபிரியா நிலையெனவே எனை பிரியா துணையெனவே
இறைவா என் இறைவா இதயம் எழுவாய் 
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - எந்தன் 
வாழ்வு ஒளிர வாசல் திறந்து எனை அழைத்திடவா

vaigarai pozhuthin vasanthame nee vaa
vidiyalai thedum vizhigalil oli thaa
vaazhvu malarnthida vaan mazhaiyena vaa
vazhi irul thanile valarmathi ena vaa - ingu
paadum intha jeevanile paramane nee vaa

alaigalilla kadal naduve payanamena en vaazhvu
amaithiyengum amaithiyena payanamathai naan thodara
iraivaa en iraivaa idhayam ezhuvaay
niraivaay enile nithamum uraivaay - enthan
vazhvu olira vaasal thiranthu enai azhaithidavaa

idarvarinum thuyarvarinum innuyirthan pirinthidinum
inaipiriya nilaiyenave enai piriyaa thunaiyenave
iraivaa en iraivaa idhayam ezhuvaay
niraivaay enile nithamum uraivaay - enthan
vazhvu olira vaasal thiranthu enai azhaithidavaa

padiyeri varukindren deva

படியேறி வருகின்றேன் தேவா - எனை 
பலியாக்க வருகின்றேன் தேவா - நான் 
படியேறி வருகின்றேன் தேவா

மகனையே பலியாகக் கேட்டாய் - ஆபிரஹாம் 
மனமார பலியாக்க வந்தார்
மனதினை மாசின்றி கேட்டாய் - நான் 
மகிழ்வோடு தருகின்றேன் உமக்கே 

ஏழை நான் என்றேங்கி நின்றேன் - என்னை 
நீ வேண்டும் வாவென்று சொன்னாய் 
பிழை செய்து நான் வாழ்ந்த போது 
தயை செய்து எனை ஏற்றுக் கொண்டாய்


padiyeri varugindren deva - ennai
paliyaaka varukindren deva - naan
padiyeri varugindren deva

maganaiyae baliyaaga kaettay aabiraham
manamaar baliyaakka vanthar
manathinai maasindri kaettay - naan
makizhvodu tharukindren umakke

aezhai naan endraengi nindren - ennai
nee vaendum vaavendru sonnaay
pizhai seythu naan vaazhntha pothu
thayai seythu enai aetru kondaay

nanmaigal seytha iravanukku

நன்மைகள் செய்த இறைவனுக்கு 
நன்றியின் பலியை செலுத்திட வாரீர் -- 2
நன்மைகள் நாமே அடைவோம் வாரீர்

உள்ளத்தை தருவது திருப்பலியாம் 
உகந்த தென்றால் அது பெரும் பலியாம் 
கொடைகள் பெறுவது தகும் வழியாம் --2
குறையினை போக்கும் கோவழியாம்

வானத்தை நோக்கும் நறும்புகை போல் 
வாருங்கள் உள்ளத்தை அளித்திடுவோம் 
அனைத்தையும் அன்புடன் கொண்டு வந்தே -- 2
ஆண்டவர் திருமுன் படைத்திடுவோம்


nanmaigal seytha iraivanukku
nandriyin paliyai seluthida vaareer - 2
nanmaigal naame adaivom vaareer

ullathai tharuvathu thiruppaliyaam
ugantha thendraal athu perum paliyaam
kodaikal peruvathu thagum vazhiyaam - 2
kuraiyinai pokkum ko vazhiyaam

vaanathai nokkum narumpugai pol
vaarungal ullathai alithiduvom
anaithayum anbudan kondu vanthe - 2 
aandavar thirumun padaithiduvom

thalaiva unai vananga

தலைவா உன்னை வணங்க - என் 
தலை மேல் கரம் குவித்தேன் 
வரமே உன்னை கேட்க - நான் 
சிரமே தாழ் பணிந்தேன்

அகல் போல் எரியும் உன் அன்பு 
அது பகல் போல் மணம் பரவும் 
நிலையாய் உன்னை நினைத்தால் - நான் 
மலையாய் உயர்வடைவேன் 

நீர்போல் தூய்மையையும் - என் 
நினைவில் ஓடச் செய்யும்
சேற்றினில் நான் விழுந்தால் - என்னை 
சீக்கிரம் தூக்கிவிடும்


thalaiva unai vananga - en
thalaimael karam kuvithen
varame unai kaetka - naan
sirame thaazh paninthen

agal pol eriyum un anbu
adhu pagal pol manam paravum
nilaiyaay unai ninaithaal naan 
malaiyaay uyarvadaiven

neerpol thooymaiyaiyum - en
ninaivil oda cheyyum
setrinil naan vizhunthaal - ennai
seekkiram thookkividum

un idhaya vaasal thedi

உன் இதய வாசல் தேடி வருகின்றேன் 
என் இதயம் உறைய என்னில் வாருமே 
நீயில்லையேல் நானில்லையே 
நான் வாழ என்னுள்ளம் வா 

காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் 

காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் 
உன் அன்பு என்றென்றும் மாறாதைய்யா 
உன் வழியில் நான் என்றும் வாழ்வேனையா 

குயில் கூவ மறக்கலாம் மயிலாட மறக்கலாம் 
நயமுடனே நண்பரும் நம்மை விட்டு பிரியலாம்
உன் அன்பு என்றென்றும் மாறாதைய்யா 
உன் வழியில் நான் என்றும் வாழ்வேனையா

un idhaya vaasal thedi varugindren
en idhayam uraiya ennil vaarume
nee illaiyel naan illayae
naan vaazha ennullam vaa

kaalangal maaralaam kolangal maaralaam
kaatrasaiya marakalaam kadalasaya marakalaam
un anbu endrendrum maaraathaiya
un vazhiyil naan endrum vaazhvaenaiya

kuyil koova marakkalaam mayilaada marakkalaam
nayamudanae nanbarum nammai vittu piriyalaam
un anbu endrendrum maaraathaiya
un vazhiyil naan endrum vaazhvaenaiya

Iraivanin aavi nizhalidave

இறைவனின் ஆவி நிழலிடவே 
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே 
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணியினை தொடர்ந்திடவே 

வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும் 
அடிமைகள் விடுதலை அடைந்திடவும் 
ஆண்டவர் அரசில் துயரில்லை என 
வான் அதிர பறை சாற்றிடவும் -  எனை 

குருடரும் ஒளியுடன் நடந்திடவும் 
குவலயம் நீதியில் திளைத்திடவும் 
அருள்நிறை காலம் அவனியிலே 
வருவதை வாழ்வினில் காட்டிடவும் - எனை


iraivanin aavi nizhalidave 
igamathil avar pugazh pagarnthidave
ennai azhaithaar anbil panithaar
avar paniyinai thodarnthidave

variyavar chezhipinil vaazhnthidavum
adimaigal viduthalai adainthidavum
aandavar arasil thuyarillai ena
vaan athira parai saatridavum - enai

kurudarum oliyudan nadanthidavum
kuvalayam neethiyil thalaithidavum
arulnirai kaalam avaniyile
varuvathai vaazhvinil kaattidavum - enai

iraiva idho varugindrom

இறைவா இதோ வருகின்றோம் 
உம்திரு உள்ளம் நிறைவேற்ற 

கல்லான இதயத்தை எடுத்துவிடு 
எமைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு 
எம்மையே நாங்கள் மறக்க விடு 
கொஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு 

பலியென உணவை தருகின்றோம் 
நிதம் பசித்தோர்க்கு உணவிட மறக்கின்றோம் 
கடமை முடிந்ததென நினைக்கின்றோம் 
எங்கள் கண்களை கொஞ்சம் திறந்து விடு 

துளிர்க்கும் விழிநீர் கொணர்கின்றோம் 
அதைத் துடைப்பாய் என உனைக் கேட்கின்றோம் 
வறியவர் கண்களில் வடிநீரை இன்று 
மறந்தோம் எம்மை மாற்றிடுவாய்


iraiva idho varugindrom
un thiru ullam niraivaetra

kallaana idhayathai eduthuvidu
emai kanivulla nenjudane vaazha vidu
emmaiyae naangal marakka vidu
konjam aenaiyor thunbam ninaikavidu

paliyena unavai tharugindrom
nitham pasothorku unavida marakkindrom
kadamai mudinthathena ninaikindrom
engal kangalai konjam thiranthu vidu

thulirkum vizhineer konarkindrom
athai thudaipaay ena unaik kaetkindrom
variyavar kankalil vadineerai indru 
maranthom emmai maatriduvaay

archanai malaraga

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் 
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் 
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட 
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம் 

தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே 
பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும் 
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் 
மனிதராக புனிதராக வாழ பணிக்கின்றீர் 
பிறரும் வாழ எங்கள் வாழ்வை கொடுக்க அழைக்கின்றீர் 
அஞ்சாதீர் என்று எம்மை காத்து வருகின்றீர் 

உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர் 
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர் 
உமது மாட்சியை எம்மில் துலங்க செய்கின்றீர் 
உமது சாட்சியாய் நாங்கள் விளங்க செய்கின்றீர் 
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர் 
கட்டி எழுப்ப நட்டுவைக்க எம்மை அனுப்பினீர் 
அஞ்சாதீர் என்று எம்மை காத்து வருகின்றீர்


archanai malaraaga aalayathil varugindrom
aananthamaay pugazh geetham endrum paaduvom
arpanithu vaazhnthida anbar ummil valarnthida
aasaiyodu arul vaendi panikindrom

thaayin karuvile uruvagum munnare
arinthu engalai thaerntha deyvamae
paaviyaayinum pachai pillaiyaayinum
archithirukkindreer karpithirukindreer
manitharaaga punitharaaga vaazha panikkindreer
pirarum vaazha engal vaazhvai kodukka azhaikindreer
anjatheer endru emmai kaathu varugindreer

umathu vaarthaiyay engal vaayil oottineer
umathu paathaiyay engal paathaiyaakkineer
umathu maatchiyai emmil thulanga cheykindreer
umathu saatchiyaay naangal vilanga seykindreer
azhithu ozhika kavizhthu veezhtha thittam theetineer
katti ezhupa natuvaika emmai anuppineer
anjatheer endru emmail kaathu varugindreer