Unnodu naan virunthunna

உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும் 
உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும் 
உன் அன்பில் நான் உறவாட வேண்டும் 

என் வாழ்விலே இது ஒரு பொன்னாள் 
என் அகமதிலே நீ வரும் திருநாள் 
உன் அன்புக்காய் அனைத்தையும் இழப்பேன் 
மன்னவன் உமக்காய் என்னையே கொடுப்பேன் 

பொருட்செல்வமே என் கடவுள் என்று 
ஏழையின் பொருளை எனக்கென பறித்தேன் 
மனமாறினேன் மகிழ்வடைந்தேன் நான் 
பன்மடங்காக ஏழைக்கு கொடுப்பேன் 

என் பாவத்தை மன்னிக்க வருவாய் 
என் உளமதிலே அமைதியை தருவாய் 
என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய் 
என் வீட்டிற்கு மீட்பினை தருவாய் 

unnodu naan virunthunna vaendum
un veettil naan kudikolla vendum
un anbil naan uravaada vendum

en vaazhvile idhu oru ponnaal
en agamathile nee varum thirunaal
un anbukkaay anaithaiyum izhapen
mannavan unakkay ennaiye koduppen

porutselvame en kadavul endru
aezhaiyin porulai enakkena parithen
manamaarinen magizhvadainthen naan
panmadangaaga aezhaikku kodupen

en paavathai mannika varuvaay
en ulamathile amaithiyai tharuvaay
en idhayathile vaazhnthida varuvaay
en veetirku meetpinai tharuvaay

Anbennum veenaiyile

அன்பென்னும் வீணையிலே நல் ஆனந்த குரலினிலே
ஆலய மேடையிலே உன் அருளினை பாடிடுவேன் 

அகமெனும் கோவிலிலே என் தெய்வமாய் நீ இருப்பாய் 
அன்பெனும் விளக்கேற்றி உன் அடியினை வணங்கிடுவேன் 

வாழ்வெனும் சோலையிலே நல் தென்றலாய் நீ இருப்பாய் 
தூய்மையெனும் மலரில் நான் தாழ்மையாய் வணங்கிடுவேன் 

தென்றலே தவழ்ந்திடுமே என் தெய்வமே நீ இருக்க 
இன்பமே மலர்ந்திடுமே நான் உன்னில் வாழ்ந்திருக்க 

anbenum veenaiyile nal aanantha kuralinile
aalaya medaiyile un arulinai paadiduven

agamenum kovilile en dheivamaay nee irupaay
anbenum vilaketri un adiyinai vanangiduven

vaazhvenum solaiyile nal thedralaay nee irupaay
thooymaiyenum malaril naan thaazhmaiyaay vanangiduven

thedrale thavazhnthidume en dheiyvame nee irukka
inbame malarnthidume naan unnil vaazhnthirukka

Iyarkaiyil urainthidum

இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா 
என் இதயத்தில் எழுந்திட வா 
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு 
காத்திடு என் தலைவா 

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு  
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயன் என்னவோ 
மெழுகாகினேன் திரியாக வா 
மலராகினேன் மணமாக வா 

உருவில்லா இறைவன் உன் உதவியின்றி 
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ 
குயிலாகினேன் குரலாக வா
மயிலாகினேன் நடமாட வா 

iyarkaiyil urainthidum inaiyatra iraiva
en iidhayathil ezhunthida vaa
endrum ingu ennodu nindru ennai anbodu
kaathidu en thalaivaa

unthan anbu uravindri enaku ingu
sontham sutram soozhthida payan ennavo
mezhugaakinen thiriyaaga vaa
malaraaginen manamaaga vaa

uruvilla iraivan un uthaviyindri
ulagathil edhuvum nadanthidumo
kuyilaaginen kuralaaga vaa
mayilaaginen nadamaada vaa

Oru paadal naan paaduven

ஒரு பாடல் நான் பாடுவேன் 
மன்னன் உந்தன் கருணையை எண்ணி எண்ணி வியந்து மகிழ்ந்து 
நன்றி பாடல் நான் பாடுவேன் 

ஒரு நாளில் நீ செய்த நன்மைகளை சொல்ல நினைத்தால் 
வாழ்நாளே போதாதைய்யா சொல்லியும் தீராதய்யா 
நன்றி சொல்வேன் நாளெல்லாம் உந்தன் பிள்ளையாய் நான் வாழ்வேன் 

என் அன்பு தாயாக தந்தையாக எந்தன் இறைவா 
எந்நாளும் எனை பார்க்கின்றாய் கண்ணாக காத்தாள்கின்றாய் 
நான் நினைப்பேன்  நன்றி சொல்வேன் நாளெல்லாம் பாடி புகழ்வேன் 

oru paadal naan paaduven
mannan unthan karunaiyai enni enni viyanthu magiznthu
nandri paadal naan paaduven

oru naalil nee seytha nanmaigalai solla ninaithaal
vaazhnaale pothaathaiyaa solliyum theeraathaiyaa
nandri solven naalellaam untha pillaiyaay naan vaazhven

en anbu thaayaaga thanthaiyaga enthan iraiva 
ennalum enai parkindraay kannaaga kaathaalkindraay
naan ninaipen nandri solven naalelaam paadi pugazhven