oru thai thetruvathu

ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா அல்லேலூயா (2)


மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பாரே -- (ஒரு தாய்...)
 

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலை மேல் நிறுத்துவார் -- (ஒரு தாய்...)


எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே -- (ஒரு தாய்...)
 

ஒரு போதும் கை விடார்
ஒரு நாளும் விலகிடார் -- (ஒரு தாய்...)


oru thai thaetruvathu pol en nesar thetruvaar
alleluya alleluya

maarpodu anaipare
manakavalai theerpaare

karam pidithu nadathuvaar
kanmalai mael niruthuvaar

enakkaagha marithaare
en paavam sumanthaare

oru pothum kai vidaar
oru naalum vilakidaar

enai aalum mary maatha

எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா
என்றும் துணை நீயே மேரி மாதா

பரிசுத்த ஆவியாலே
வர புத்திரன் ஈன்ற தாயே
பிரபு ஏசுநாதன் அருளால்
புவியோரும் புனிதம் அடைந்தார் -- (எனை ஆளும்...)

நிலை மாறி வந்ததாலே 

நகைப்பானதே என் வாழ்வே
கணமேனும் சாந்தி இலையே
அனுதினமும் சோதியாதே -- (எனை ஆளும்...)


enai aalum mary maatha
thunai neeyae mary maatha
endrum thunai neeyae mary maatha

parisutha aaviyale
vara puthran indra thaaye 
pirabu yesunathan arulaal
puviyorum punitham adainthaar

nilai maari vanthathaale
nagaippanathe en vaazhvae
kanamaenum saanthi illaye
anuthinamum sothiyaathe

o parisutha aaviyae


ஓ பரிசுத்த ஆவியே என் ஆன்மாவின் ஆன்மாவே

உம்மை ஆராதனை செய்கின்றேன் 
இறைவா ஆராதனை செய்கின்றேன்

என்னை ஒளிரச்செய்து வழி காட்டும் 
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும் 
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும் நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும்

o parisutha aaviye en aanmaavin aanmaave
ummai aaradhanai seykindren
iraivaa aaradhanai seykindren

ennai oliraseythu vazhi kaatum
puthu valuvooti ennai thetrum
en kadamai ennavendru kaatum
athai karuthaay purinthida thondum
enna nernthaalum nandri thuthi koori paniven en iraiva
unthan thiruvulappadi ennai nadaththum

neer maathram podhum

ஏகோவா யீரே தந்தையாம் தெய்வம் 
நீர் மாத்திரம் போதும் எனக்கு
ஏகோவா ரப்பா சுகம் தரும் தெய்வம் 

உம் தழும்புகளால் சுகமானோம்
ஏகோவா ஷம்மா என் கூட இருப்பீர் 

என் தேவையெல்லாம் சந்திப்பீர்

நீர் மாத்திரம் போதும் (2)

நீர் மாத்திரம் போதும் எனக்கு

ஏகோவா எல்லொஹீம் ஷ்ரிஷ்டிப்பின் தேவனே 

உம் வார்த்தையால் உருவாக்கினீர் 
ஏகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே 
உம்மைப்  போல் வேறு தேவனில்லை 
ஏகோவா ஷாலோம் உம் சமாதானம் 
தந்தீர் என் உள்ளத்தினில் -- (நீர் மாத்திரம்...)

ஏசுவே நீரே என் ஆத்ம நேசர் 
என் மேல் எவ்வளவன்பு கூர்ந்தீர் 
என்னையே மீட்க உம்மையே தந்தீர் 
உம் அன்பிற்கு இணையில்லையே 
என் வாழ்நாள் முழுதும் 
உமக்காக வாழ்வேன் 
நீரே என்றென்றும் போதும் -- (நீர் மாத்திரம்...)

yekovah yeerae thanthaiyaam dheyvam
neer maathram pothum enakku
yekovah rapha sugam tharum dheiyvam
um thazhumpukalaal sugamaanom
yekovah shamma en kooda irupeer
en thevaiyellaam santhipeer

neer maathram pothum (2)
neer maathram pothum enaku

yekovah elloheem shrushtipin devanae
um vaarthaiyaal uruvaakineer
yekovah parisuthar unnathar neere
ummai pol vaeru devanillai
yekovah shaalom um samaathaanam
thantheer en ullathinil

yesuve neere en aathma naesar
en mael evalavanbu koorntheer
ennaiyae meetka ummaiyae thantheer
un anbirku inaiyillaye
en vaazhnaal muzhuthum
umakaaga vaazhven
neerae endrendrum podhum

anbu kooruven

அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பலத்தோடு அன்பு கூறுவேன்
ஆராதனை ஆராதனை  - (2)

எபிநேசரே எபிநேசரே இது வரையில் உதவினீரே (2)
இது வரையில் உதவினீரே -- (உம்மை முழு உள்ளத்தோடு...)

எல்ரோயி எல்ரோயி என்னைக் கண்டீரே நன்றி ஐயா (2)
என்னைக் கண்டீரே நன்றி ஐயா -- (உம்மை முழு உள்ளத்தோடு...)

எகொவாரப்பா எகொவாரப்பா  சுகம் தந்தீரே நன்றி ஐயா  (2)
சுகம் தந்தீரே நன்றி ஐயா -- (உம்மை முழு உள்ளத்தோடு...)


anbu kooruven innum athigamaay
araathipen innum aarvamaay
muzhu ullathodu aaraathipen muzhu balathodu anbu kooruven
araadhanai araadhanai - (2)

ebinesare ebinesare idhu varaiyil uthavineere
idhu varaiyil uthavineere 

elroyi elroyi ennai kandeere nandri aiya
ennai kandeerae nandri aiya

yekovarapha yekovarapha sugam thantheerae nandri aiya
sugam thantheerae nandri aiya

thanthen ennai yesuve

தந்தேன் என்னை ஏசுவே இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய தந்தேன் என்னை தாங்கியருளும்

ஜீவ காலம் முழுதும்

தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் புரிகையில் 

காவும் உந்தன் கரந்தனில் வைத்து -- (தந்தேன் என்னை...)

உந்தன் சித்தம் நான் செய்வேன் 

எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும் 

ஏசுவே அங்கே இதோ போகிறேன் -- (தந்தேன் என்னை...)

ஒன்றுமில்லை நான் ஐயா 

உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால் 

இன்றே அடியேனை நிரப்பும் -- (தந்தேன் என்னை...)

thanthen ennai yesuve indha nerame umake
unthanukae oozhiyam seyya thanthen ennai thaangiyarulum

jeeva kaalam muzhuthum 
deva pani seythiduven
ooril kadum por purikaiyil
kaavum unthan karnthanil vaithu

unthan sitham naan seyven
enthan sitham ozhithiduven
entha idam enaku kaatinum
yesuve ange idho pogiren

ondrumillai naan aiya
ummaal andri ondrum seyyen
andru seedarkalitha aaviyaal
indre adiyaenai nirappum

unnai thedi vanthen

உன்னைத் தேடி வந்தேன் சுமை தீரும் அம்மா
உலகாளும் தாயே அருள் தாரும் அம்மா

முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய்  (2)
பால் கொண்ட கலசம் பொங்கிட செய்தாய்
பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய்  -- (உன்னைத் தேடி...)

கடல் நீரும் கூட உன் கோவில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம்
அன்பாகி எமக்கு அருள் தாரும் அம்மா  -- (உன்னைத் தேடி...)


unnaithedi vanthen sumai theerumamma
ulagaalum thaaye arul thaarum amma

mudamaana maganai nadamaada vaithaay
kadal neeril thavitha kappalai kaathaay
paal konda kalasam pongida seythaay
porul konda seemaan un paatham saerthaay

kadal neerum kooda un kovil kaana
alaiyaaga vanthu un paatham saerum
arul thedi naangal un paatham paninthom
anbaagi emakku arul thaarum amma

ellam umakaagha

எல்லாம் உமக்காக ஏசுவின் திவ்ய இருதயமே 
எல்லாம் உமக்காக

எந்தன்  சிந்தனை சொல் அனைத்தும் 

எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் (2)
உம் புகழ்  அதிமிகு மகிமைக்கே -- 
(எல்லாம் உமக்காக...)


ஒளியை நாடா மலரில்லை 

நீரை வேண்டா வேரில்லை
உன் புகழ் தேடா வாழ்வனைத்தும் (2)
வாழ்வில்லை அதில் பயனில்லை  -- (
எல்லாம் உமக்காக...)

வழியும் ஒளியும் உறுதுணையும் 

வாழ்வின் நிறைவும் நீரன்றோ
உன்னருள் ஒன்றே  வேண்டி நின்றேன் (2)
இன்றுன் திருப்பதம் சரணடைந்தேன் -- (
எல்லாம் உமக்காக...)


ellaam umakaagha yesuvin dhivya irudhayame
ellaam umakaagha

enthan sinthanai sol anaithum
enthan seyalgal ovvondrum
enthan udal porul aavi mutrum
um pugazh adhi miga magimaikkae

oliyai naadaa malarillai
neerai vaenda vaerillai
un pugazh thaedaa vaazhvanaithum 
vaazhvillai athil payanillai

vazhiyum oliyum uruthunaiyum
vaazhvin niraivum neerandro
unnarul ondre vaendi nindren
indrum thirupatham saranadainthen