thanthen ennai yesuve

தந்தேன் என்னை ஏசுவே இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய தந்தேன் என்னை தாங்கியருளும்

ஜீவ காலம் முழுதும்

தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் புரிகையில் 

காவும் உந்தன் கரந்தனில் வைத்து -- (தந்தேன் என்னை...)

உந்தன் சித்தம் நான் செய்வேன் 

எந்தன் சித்தம் ஒழித்திடுவேன்
எந்த இடம் எனக்கு கட்டினும் 

ஏசுவே அங்கே இதோ போகிறேன் -- (தந்தேன் என்னை...)

ஒன்றுமில்லை நான் ஐயா 

உம்மால் அன்றி ஒன்றும் செய்யேன்
அன்று சீடருக்கு அளித்த ஆவியால் 

இன்றே அடியேனை நிரப்பும் -- (தந்தேன் என்னை...)

thanthen ennai yesuve indha nerame umake
unthanukae oozhiyam seyya thanthen ennai thaangiyarulum

jeeva kaalam muzhuthum 
deva pani seythiduven
ooril kadum por purikaiyil
kaavum unthan karnthanil vaithu

unthan sitham naan seyven
enthan sitham ozhithiduven
entha idam enaku kaatinum
yesuve ange idho pogiren

ondrumillai naan aiya
ummaal andri ondrum seyyen
andru seedarkalitha aaviyaal
indre adiyaenai nirappum