yaaridam selvom iraiva

யாரிடம் செல்வோம் இறைவா 
வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் 
உம்மிடம் அன்றோ உள்ளன 
இறைவா......இறைவா......

அலை மோதும் உலகினிலே  
ஆறுதல் நீ  தரவேண்டும் (2)
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ 
ஆதரித்தே அரவணைப்பாய்  -- (யாரிடம்...)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதைய்யா (2)
குணமதிலே மாறாட்டம் 
குவலயம் தான் இணைவதெப்போ  -- (யாரிடம்...)

வேரறுந்த மரங்களிலே 
விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
உலகிருக்கும் நிலை கண்டு 
உனது மனம் இரங்காதோ  -- (யாரிடம்...)

yaaridam selvom iraiva
vaazhvu tharum vaarthaiyelaam
ummidam andro ullana
iraivaa iraivaa

alaimodhum ulaginile
aaruthal nee tharavaendum
andi vanthom adaikalam nee
aatharithae aravanaipaay

manathinile poraattam
manithanaiyae vaatuthaiyaa
kunamathile maaraatam
kuvalayam thaan inaivatheppo

vaeraruntha marangalilae
vilainthirukum kanikalai pol
ulagirukum nilai kandu
unathu manam irangaatho

kaanikai thanthom karthaave

காணிக்கை தந்தோம் கர்த்தாவே 
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே 
கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே 
காணிக்கை யார் தந்தார் நீர் தானே 

நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் ரட்சகன் கொடுத்தது 
மேகம் சிந்தும் நீர்த்துளி எல்லாம் பூமி கொடுத்தது 
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்  (2)
ஆகாயம் மாறும் கடவுளின் மகனே 
ஆனாலும் உன் அன்பு மாறாது 

ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே 
ஆனமட்டும் அழுது விட்டால் அமைதி பெருகுதே 
கண்ணீரை போலே காணிக்கை இல்லை (2) 
கண் கொண்டு பாரும் கடவுளின் மகனே 
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே 

காணிக்கை தான் செலுத்தி வந்தோம் கருணை கிடைக்கட்டும் 
தேவன் தந்த ஜீவன் எல்லாம் புனிதம் அடையட்டும் 
என் அண்டை வாரும் தாபங்கள் தீரும் (2)
ஏனென்று கேளும் இறைவனின் மகனே 
எம்மையே காணிக்கை தந்தோமே 

kaanikai thanthom karthave
aetrukkol emmai ipothe
kankondu paarum kadavulin magane
kaanikai yaar thanthaar neerthane

nanagal thantha kaanikai ellam ratchagan koduthathu
megam sinthum neerthuli ellaam boomi koduthathu
kaalangal maarum kolangal maarum
aagaayam maarum kadavulin magane
aanaalum un anbu maaraathu

aalayathin vaasal vanthaal azhugai varuguthe
aanamatum azhuthu vitaal amaithi peruguthe
kaneerai pole kaanikai illai 
kankondu paarum kadavulin magane
kaneerin arthangal neerthaane

kaanikai thaan seluthi vanthom kerunai kidaikattum
devan thantha jeevan ellam punitham adaiyattum
en andai vaarum thaabangal theerum
aen endru kaelum iraivanin magane
emmaiyae kaanikai thanthome

aani konda um kaayangalai

ஆணி கொண்ட உம் காயங்களை அன்புடன் முத்தி செய்கின்றேன் 
பாவத்தால் உம்மை கொன்றேனே 
ஆயரே என்னை மன்னியும் 

வலது கரத்தின் காயமே அழகு நிறைந்த ரத்தினமே  
இடது கரத்தின் காயமே கடவுளின் திரு அன்புருவே 
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே பலன் மிகத்தரும் நற்கனியே 
இடது பாதக் காயமே திடம் மிகத்தரும் தேனமுதே 
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே 
திரு விலாவின் காயமே அருள் சொரிந்திடும் ஆலயமே 
அன்புடன் முத்தி செய்கின்றேன் -- (ஆணி கொண்ட)

aani konda um kaayangalai anbudan muthi seykindren
paavathaal ummai kondrenae
aayare ennai manniyum

valathu karathin kaayame azhagu niraintha rathiname
idathu karathin kaayame kadavulin thiru anburuve
anbudan muthi seykindren

valathupaatha kaayame palan miga tharum narkaniye
idathu paatha kaayame thidam miga tharum thaenamuthe
anbudan muthi seykindren

thiru vilaavin kaayame arul sorinthidum aalayame
thiru vilaavin kaayame arul sorinthidum aalayame
anbudan muthi seykindren

thirukarathaal thaangiyennai

திருக்கரத்தால் தாங்கியென்னை 
திருச்சித்தம் போல் நடத்திடுமே 
குயவன் கையில் களிமண் நான் 
அனுதினமும் வனைந்திடுமே 

ஆழ்கடலில் அலைகளினால் 
அசையும் போது என் படகில் 
ஆத்ம நண்பர் இயேசு உண்டு 
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் -- (திருக்கரத்தால்)

உன் வசனம் தியானிக்கையில் 
இதயமதில் ஆறுதலே 
காரிருளில் நடக்கையிலே 
தீபமாக வழி நடத்தும் -- (திருக்கரத்தால்)

thirukkarathaal thaangiyennai
thiruchitham pol nadathidume
kuyavan kaiyil kaliman naan
anuthinamum vanainthidume

aazhkadalil alaikalinaal
asaiyumpodhu en padakil
aathma nanbar yesu undu
saernthiduven avar samoogam

un vasanam dhyaanikayil
idhayamathil aaruthale
kaarirulil nadakaiyile
dheepamaaga vazhinadathum

kadal kadanthu sendraalum

கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் 
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை நீ கடந்திட நேர்ந்தாலும் 
உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் 
அஞ்சாதே கலங்காதே 

தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் 
பொன் விளை  நிலம் போலே 
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் 
உன் நிலை உயர்ந்தது அவராலே 
பால் நினைந்தூட்டிடும் தாய் மறந்தாலும் நீ அவர் மடிமேலே 
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார் வாழ்வினில் ஒளிதானே 
அஞ்சாதே கலங்காதே  -- (கடல் கடந்து)

பாலையில் பாதையும் பால்விழி ஓடையும் 
தோன்றிடும் அவர் கையால் 
வான் படை ஆண்டவர் வாய் மொழியால் வரும் 
மேன்மையை எவர் சொல்வார்
பார்வை இழந்தவர் வாய் திரவாதோர் யாவரும் நலமடைவார் 
இறையாட்சியில் அவர் மாட்சியில் மானிடம் ஒன்றாகும் 
அஞ்சாதே கலங்காதே  -- (கடல் கடந்து)


kadal kadanthu sendraalum thee naduve nadanthaalum
puyal soozhnthu ezhunthidum kaarirulai nee kadanthida naernthaalum
unnodu naanirupen unnodu naanirupen
anjaathe kalangaathe

devanin paarvaiyil nee mathipullavan
pon vilai nilam pola
boomiyil vaazhnthidum yaavilum
un nilai uyarnthathu avaraale
paal ninainthootidum thaay maranthaalum nee avar madimaelae
manam thaetruvaar balam ootruvaar vaazhvinil olithaane

paalaiyil paathaiyum paalvizhi oodaiyum
thondridum avar kaiyaal
vaan padai aandavar vaazhmozhiyaal varum
maenmaiyai evar solvaar
paarvai izhanthavar vaay thiravaathor yaavarum nalamadaivaar
iraiyaatchiyil avar maatchiyil maanidam ondragum
anjaathe kalangaathe

maatha un kovilil

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் 
தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே 
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா -- (மாதா உன்)

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே 
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே 
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமா மாதா -- (மாதா உன்) 

பிள்ளை பெறாத அன்னை தாயானது 
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது 
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா -- (மாதா உன்)

maadha un kovilil mani deepam aetrinen
thaayendru unnaithaan pillaikku kaatinen

meyppan illaatha manthai vazhi maarume
mary un jothi kandaal vithi maarume
mezhugu pol urukinom kaneerai maatravaa maatha

kaaval illaatha jeevan kaneerile
karai kandidaatha oodam thaneerile
arultharum thiruchabai maniyosai ketkumaa maatha

pillai peraatha annai thaayaanathu
annai illaatha magalai thaalaatuthu
kartharin kattalai naan enna solvathu maathaa