thirukarathaal thaangiyennai

திருக்கரத்தால் தாங்கியென்னை 
திருச்சித்தம் போல் நடத்திடுமே 
குயவன் கையில் களிமண் நான் 
அனுதினமும் வனைந்திடுமே 

ஆழ்கடலில் அலைகளினால் 
அசையும் போது என் படகில் 
ஆத்ம நண்பர் இயேசு உண்டு 
சேர்ந்திடுவேன் அவர் சமூகம் -- (திருக்கரத்தால்)

உன் வசனம் தியானிக்கையில் 
இதயமதில் ஆறுதலே 
காரிருளில் நடக்கையிலே 
தீபமாக வழி நடத்தும் -- (திருக்கரத்தால்)

thirukkarathaal thaangiyennai
thiruchitham pol nadathidume
kuyavan kaiyil kaliman naan
anuthinamum vanainthidume

aazhkadalil alaikalinaal
asaiyumpodhu en padakil
aathma nanbar yesu undu
saernthiduven avar samoogam

un vasanam dhyaanikayil
idhayamathil aaruthale
kaarirulil nadakaiyile
dheepamaaga vazhinadathum