maatha un kovilil

மாதா உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன் 
தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் மாதா 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே 
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே 
மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா -- (மாதா உன்)

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே 
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே 
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமா மாதா -- (மாதா உன்) 

பிள்ளை பெறாத அன்னை தாயானது 
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது 
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது மாதா -- (மாதா உன்)

maadha un kovilil mani deepam aetrinen
thaayendru unnaithaan pillaikku kaatinen

meyppan illaatha manthai vazhi maarume
mary un jothi kandaal vithi maarume
mezhugu pol urukinom kaneerai maatravaa maatha

kaaval illaatha jeevan kaneerile
karai kandidaatha oodam thaneerile
arultharum thiruchabai maniyosai ketkumaa maatha

pillai peraatha annai thaayaanathu
annai illaatha magalai thaalaatuthu
kartharin kattalai naan enna solvathu maathaa