sammathame iraiva

சம்மதமே இறைவா சம்மதமே தலைவா
உன் மாலையிலே ஒரு மலராகவும்
பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே இறைவா
மாறிட சம்மதமே

கலங்கும் மனதுடைய
நான் உனக்காவே உன் பணிக்காவே
வாழ்ந்திட வரம் தருவாய்
கருவாக எனை படைத்து உயர் கண்மணியாய் எனை வளர்த்து
கரமதிலே உரு பதித்து கருத்துடனே என்னை காக்கின்றாய்

மலையாய் நான் கணித்த
பெரும் காரியமும் உயர் காவியமும்
மறைந்தே போனது
திருவாக உன்னை நினைத்து உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து
உன் பெயரை சாற்றிடவே நலம் தரவே எனை அணைக்கின்றாய்

sammathame iraiva sammathame thalaiva
un maalaiyile oru malaraagavum
paalaiyile siru manalaagavum vaazhnthida sammathame iraiva
maarida sammathame

kalangum manathudaiya
naan unakkagave un panikaagave
vaazhnthida varam tharuvaay
karuvaaga enai padaithu uyar kanmaniyaay enai valarthu
karamathile urupathithu karuthudane ennai kaakindraay

malaiyaay naan kanitha
perum kaariyamum uyar kaaviyamum
marainthae ponathu
thiruvaaga unai ninaithu uyar uravaagave nenjil pathithu
un peyarai saatridave nalam tharave enai anaikkindraay

semmariyin virunthirku

செம்மறியின் விருந்துக்கு
அழைக்க பெற்றோர் பேரு பெற்றோர்
அவ்விருந்தை உண்டிட
சென்றிடுவோம் இன்பம் பொங்க

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்க தடையென்ன -- (2)
உள்ள கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்
உவகை எனும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் -- (செம்மறியின்...)

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே -- (2)
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதத்தால் இந்த உலகம் உய்யுமே -- (செம்மறியின்...)

semmariyin virunthirku azhaikapetror peru petror
avirunthai undida sendriduvom inbam ponga

iraivan tharum virunthidhu adhai unna thadaiyenna
uraiya varum iraivanai naam aerka thadaiyenna
ulla kathavu thiranthathu adhan ulle vaazhuvaay
uvagai ennum oli konarnthu emmai aaluvaay

vaanam pozhiya boomi vilaiya valamum ponguthe
valame varum oliyaal solai malarum engume
enthan unavaay nee vanthaale inbam thangume
unthan arulai vithaithaal intha ulagam uyyume

um siragugal nizhalil

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்
என்னை அரவணைத்திடு இறைவா -- (2)
அந்த இருளிலும் ஒளி சுடரும்
வெண் தணலிலும் மனம் குளிரும் -- (2)
உந்தன் கண்களின் இமை போல் எந்நாளும்
என்னை காத்திடு என் இறைவா

பாவங்கள் சுமையாய் இருந்தும் உம்
மன்னிப்பில் பனி போல் கரையும்
கருணையின் மழையில் நனைந்தால் உன் 
ஆலயம் புனிதம் அருளும் -- (உம் சிறகுகள்...)

வலையினில் விழுகின்ற பறவை அன்று 
இழந்தது அழகிய சிறகை
வானதன் அருள் மழை பொழிந்தே நீ 
வளர்த்திடு அன்பதன் உறவை -- (உம் சிறகுகள்...)

um siragugal nizhalil ennalum
ennai aravanaithidu iraiva
andha irulilum oru sudarum
ven thanalilum manam kulirum
unthan kangalin imai pol ennaalum
ennai kaathidu en iraivaa

paavangal sumaiyaay irunthum um
mannippil pani pol karaiyum
karunaiyin mazhaiyil nanainthaal un
aalayam punitham arulum

valaiyinil vizhugindra paravai andru
izhanthathu azhagiya siragai
vaanathan arul mazhai pozhinthae nee
valarthidu anbathan uravai

oru podhum unai piriya

ஒரு போதும் உனை பிரியா நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல் கூட எறிந்தாலும் உம் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நிழலாக வா இறைவா

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் எனை அழைத்தாய் -- (2)
ஏன் என்னை நீ தெரிந்தாய்
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன்
தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன்
உம்மோடு நான் வாழுவேன் -- (ஒரு போதும்)

நீர் தேடும் மான் போல தேடி வந்தேன்
நீயின்றி வாழவில்லை என்றுணர்ந்தேன் -- (2)
என்னுள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என் உள்ளம் நின்றாய்
நிதம் என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உம்மோடு நான் வாழுவேன் -- (ஒரு போதும்)

oru podhum unai piriya nilaiyaana uravondru vaendum
en udal kooda erinthaalum un naamam naan solla vaendum
ninaivilum neeyae en kanavilum neeyae
neengaatha nizhalaaga vaa iraivaa

un kaiyil ennai nee poriththaay
peyar solli anbaay ennai azhaithaay
aen ennai nee therinthaay
en vaazhvil aen nuzhainthaay
un maaraatha anbil magizhvondru kanden
thaay uravondru thedum pillai pol nindren
ummodu naan vaazhuven

neer thedum maan pola thedi vanthen
neeyindri vaazhvillai endrunarnthen
ennullae vaazhum dheiyvam
ennai nee aalum dheiyvam
en yesu neeyae en ullam nindraay
nitham en paathai munne neethaane sendraay
ummodu naan vaazhuven

entha kaalathilum entha nerathilum

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் 
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் 
எந்த வேளையிலும் துதிப்பேன் -- (2)

ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே -- (எந்த காலத்திலும்)

துன்ப நேரத்தில் இன்பமே அவர்
இன்னல் வேளையில் என் மாறிடா நேசர் -- (எந்த காலத்திலும்)

தேவனும் நீரே என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் என் சர்வமும் நீரே -- (எந்த காலத்திலும்)

entha kaalathilum entha nerathilum
nandriyaal ummai naan thuthipen
yesuve ummai naan thuthipen thuthipen
entha velaiyilum thuthipen

aathiyum neere andhamum neere
jothiyum neere en sonthamum neere

thunba nerathil inbame avar
innal velaiyil en maaridaa nesar

devanum neere en jeevanum neere
raaja raajanum en sarvamum neere

vaazhvai alikum vallava

வாழ்வை அளிக்கும் வல்லவா
தாழ்ந்த என் உள்ளமே
வாழ்வின் ஒளியை ஏற்றவே
எழுந்து வாருமே

ஏனோ இந்த பாசமே
ஏழை என்னிடமே -- (2)
எண்ணிலாத பாவமே
புரிந்த பாவி மேல் -- (வாழ்வை...)

உலகம் யாவும் வெறுமையே
உன்னை நான் பெறும் போது -- (2)
உறவு என்று இல்லையே
உன் உறவு வந்ததால் -- (வாழ்வை...)

vaazhvai alikkum vallavaa
thaazhntha en ullame
vaazhvin oliyai aetrave
ezhunthu vaarume

aeno intha paasame
aezhai ennidame
ennilaatha paavame 
purintha paavimael

ulagam yaavum verumaiyae 
unnai naan perum pothu
uravu endru illayaae
un uravu vanthathaal