semmariyin virunthirku

செம்மறியின் விருந்துக்கு
அழைக்க பெற்றோர் பேரு பெற்றோர்
அவ்விருந்தை உண்டிட
சென்றிடுவோம் இன்பம் பொங்க

இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன
உறைய வரும் இறைவனை நாம் ஏற்க தடையென்ன -- (2)
உள்ள கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய்
உவகை எனும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் -- (செம்மறியின்...)

வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே
வலமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே -- (2)
எந்தன் உணவாய் நீ வந்தாலே இன்பம் தங்குமே
உந்தன் அருளை விதத்தால் இந்த உலகம் உய்யுமே -- (செம்மறியின்...)

semmariyin virunthirku azhaikapetror peru petror
avirunthai undida sendriduvom inbam ponga

iraivan tharum virunthidhu adhai unna thadaiyenna
uraiya varum iraivanai naam aerka thadaiyenna
ulla kathavu thiranthathu adhan ulle vaazhuvaay
uvagai ennum oli konarnthu emmai aaluvaay

vaanam pozhiya boomi vilaiya valamum ponguthe
valame varum oliyaal solai malarum engume
enthan unavaay nee vanthaale inbam thangume
unthan arulai vithaithaal intha ulagam uyyume