Unnodu naan virunthunna

உன்னோடு நான் விருந்துண்ண வேண்டும் 
உன் வீட்டில் நான் குடிகொள்ள வேண்டும் 
உன் அன்பில் நான் உறவாட வேண்டும் 

என் வாழ்விலே இது ஒரு பொன்னாள் 
என் அகமதிலே நீ வரும் திருநாள் 
உன் அன்புக்காய் அனைத்தையும் இழப்பேன் 
மன்னவன் உமக்காய் என்னையே கொடுப்பேன் 

பொருட்செல்வமே என் கடவுள் என்று 
ஏழையின் பொருளை எனக்கென பறித்தேன் 
மனமாறினேன் மகிழ்வடைந்தேன் நான் 
பன்மடங்காக ஏழைக்கு கொடுப்பேன் 

என் பாவத்தை மன்னிக்க வருவாய் 
என் உளமதிலே அமைதியை தருவாய் 
என் இதயத்திலே வாழ்ந்திட வருவாய் 
என் வீட்டிற்கு மீட்பினை தருவாய் 

unnodu naan virunthunna vaendum
un veettil naan kudikolla vendum
un anbil naan uravaada vendum

en vaazhvile idhu oru ponnaal
en agamathile nee varum thirunaal
un anbukkaay anaithaiyum izhapen
mannavan unakkay ennaiye koduppen

porutselvame en kadavul endru
aezhaiyin porulai enakkena parithen
manamaarinen magizhvadainthen naan
panmadangaaga aezhaikku kodupen

en paavathai mannika varuvaay
en ulamathile amaithiyai tharuvaay
en idhayathile vaazhnthida varuvaay
en veetirku meetpinai tharuvaay