Iraivanin aavi nizhalidave

இறைவனின் ஆவி நிழலிடவே 
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே 
என்னை அழைத்தார் அன்பில் பணித்தார்
அவர் பணியினை தொடர்ந்திடவே 

வறியவர் செழிப்பினில் வாழ்ந்திடவும் 
அடிமைகள் விடுதலை அடைந்திடவும் 
ஆண்டவர் அரசில் துயரில்லை என 
வான் அதிர பறை சாற்றிடவும் -  எனை 

குருடரும் ஒளியுடன் நடந்திடவும் 
குவலயம் நீதியில் திளைத்திடவும் 
அருள்நிறை காலம் அவனியிலே 
வருவதை வாழ்வினில் காட்டிடவும் - எனை


iraivanin aavi nizhalidave 
igamathil avar pugazh pagarnthidave
ennai azhaithaar anbil panithaar
avar paniyinai thodarnthidave

variyavar chezhipinil vaazhnthidavum
adimaigal viduthalai adainthidavum
aandavar arasil thuyarillai ena
vaan athira parai saatridavum - enai

kurudarum oliyudan nadanthidavum
kuvalayam neethiyil thalaithidavum
arulnirai kaalam avaniyile
varuvathai vaazhvinil kaattidavum - enai