archanai malaraga

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம் 
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் 
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட 
ஆசையோடு அருள் வேண்டி பணிகின்றோம் 

தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே 
பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும் 
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் 
மனிதராக புனிதராக வாழ பணிக்கின்றீர் 
பிறரும் வாழ எங்கள் வாழ்வை கொடுக்க அழைக்கின்றீர் 
அஞ்சாதீர் என்று எம்மை காத்து வருகின்றீர் 

உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர் 
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர் 
உமது மாட்சியை எம்மில் துலங்க செய்கின்றீர் 
உமது சாட்சியாய் நாங்கள் விளங்க செய்கின்றீர் 
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர் 
கட்டி எழுப்ப நட்டுவைக்க எம்மை அனுப்பினீர் 
அஞ்சாதீர் என்று எம்மை காத்து வருகின்றீர்


archanai malaraaga aalayathil varugindrom
aananthamaay pugazh geetham endrum paaduvom
arpanithu vaazhnthida anbar ummil valarnthida
aasaiyodu arul vaendi panikindrom

thaayin karuvile uruvagum munnare
arinthu engalai thaerntha deyvamae
paaviyaayinum pachai pillaiyaayinum
archithirukkindreer karpithirukindreer
manitharaaga punitharaaga vaazha panikkindreer
pirarum vaazha engal vaazhvai kodukka azhaikindreer
anjatheer endru emmai kaathu varugindreer

umathu vaarthaiyay engal vaayil oottineer
umathu paathaiyay engal paathaiyaakkineer
umathu maatchiyai emmil thulanga cheykindreer
umathu saatchiyaay naangal vilanga seykindreer
azhithu ozhika kavizhthu veezhtha thittam theetineer
katti ezhupa natuvaika emmai anuppineer
anjatheer endru emmail kaathu varugindreer