thaayaga anbu seyyum

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளி ஏற்றவா 
கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே (2)
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா (2)

உன் அன்பு சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே 
உன் ஸ்வாச காற்றில் கலந்தாலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன் 
நான் என்றும் உன் சாயல் தானே 
உன் கோவில் குடி கொள்ள நீ வா 

உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுக ராகம் மீட்டிடுவேன் 
உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும்  யுகம் பல படைத்திடுவேன் 
எல்லாமே நீதானே இறைவா 
என்னுள்ள நிறைவாக நீ வா
 
thaayaaga anbu seyyum ennuyir neethaanayya
seyaaga nambi vandhom vaazhvil oli aetravaa
konjum thamizh mozhi pesi enai thaetrave (2)
pinju nenjam azhaikkudhu varuvaay deva (2)

un anbu saaralil nanainthale podhum innalgal neengidume
un swaasa kaatril kalanthaale podhum vinvaasal adainthiduven
naan endrum un saayal thaane
un kovil kudi kolla nee vaa
 
un paasa narambil inainthaale podhum suga raagam 
un vaarthai kadalil mithanthaale podhum yugam pala padaithiduven
ellame nee thaane iraivaa
ennulla niraivaaga nee vaa