deva undhan paliyaaga

தேவா உந்தன் பலியாக என்னை தந்தேன்
என்றும் எந்தன் பணிவாழ்வை ஏற்றிடுவாய்

அன்பொன்றே தினம் அலைகின்ற நெஞ்சங்கள் வீதியில் ஆயிரமே
அரவணைக்கும் கரம் தேடி ஆர்வமுடன் காத்திருக்கும் மனிதர்கள் கூட்டம் இங்கே
அன்போடு நான் வாழுவேன்
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன்
நல்லன்பை தேடும் புவிமாந்தர் வாழ என் வாழ்வை பலியாக்குவேன்

விடியாதா பொழுதென்று வீங்கிடும் விழியோடு ஏங்கிடும் மாந்தர் இங்கே
முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்து போகும் பரிதாப வாழ்க்கை இங்கே
தேவா நான் சுடராகுவேன்
எங்கும் நம்பிக்கை ஒளி ஏற்றுவேன்
போராடும் நெஞ்சில் போராட்டம் நீக்க என் வாழ்வை பலியாக்குவேன்
என் வாழ்வை பலியாக்குவேன்


deva undhan paliyaaga ennai thanthen
endrum enthan panivaazhvai aetriduvaay

anbondre thinam thedi alaigindra nenjangal veedhiyil aayirame
aravanaikkum karam thedi aarvamudan kaathirukkum manidhargal koottam inge
anbodu naan vaazhuven
sindhum kaneerai naan maatruven
nallanbai thedum puvimaanthar vaazha en vaazhvai paliyaakkuven
en vaazhvai paliyaakkuven

vidiyaadha pozhuthendru veengidum vizhiyodu aengidum maanthar inge
mudiyaadhu endrenni mugam sornthu pogindra paridhaaba vaazhkai inge
deva naan sudaraaguven
engum nambikkai oli aetruven
poraadum nenjil poraatam neenga en vaazhvai paliyaakkuven
en vaazhvai paliyakkkuven