needhaane iraivaa

நீதானே இறைவா நிலையான சொந்தம் 
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் 
உன்னருள் ஒன்றே எனக்கு தஞ்சம் 
உனை என்றும் பிரியாது ஏழை (என்) நெஞ்சம் 
நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் 

கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே 
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே  -- (2)
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே (2)
வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே (2) -- (நீயே சொந்தம்...)

நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ 
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன -- (2)
நானெங்கு போவது உனை பிரிந்து (2)
வாழ்வெல்லாம் வருவேன் உனை தொடர்ந்து (2) -- (நீயே சொந்தம் ...)

needhaane iraivaa nilaiyaana sondham
unaiyandri ulagil enakaedhu bandham
unnarul ondre enaku thanjam
unai endrum piriyaadhu aezhai en nenjam
neeye sondham neeye thanjam neeye selvam vaazhvin maiyam

kodiyodu inainthulla kilai polave
unnodu ondraagum arul vendume
kani thanthu en vaazhvu sezhipaagave
varuvaaye thalaivaa en uyir moochile

nilaivaazhvu tharugindra vaarthaigalo
iraimainthan unnidame irukkindrana
naanengu povadhu unai pirindhu
vaazhvellaam varuven unai thodarndhu