padaipu ellam umake sondham

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் 
நானும் உந்தன் கைவண்ணம் 
குயில்கள் பாடும் கிளிகள் பேசும் 
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே 

இயற்கை உனது ஓவியம் 
இணையில்லாத காவியம் 
அகிலமென்னும் ஆலயம் 
நானும் அதில் ஓர் ஆகமம் 
உள்ளம் எந்தன் உள்ளம் அது 
எந்நாளும் உன் இல்லமே 

இதயம் என்னும் வீணையில் 
அன்பை மீட்டும் வேளையில் 
வசந்த ராகம் கேட்கவே 
ஏழை என்னில் வாருமே 
தந்தேன் என்னை தந்தேன் என்றும் 
என் வாழ்வு உன்னோடு தான் 

padaipu ellam umake sondham
naanum undhan kaivannam
kuyilkal paadum kilikal pesum
en vaazhvu isaikum un raagame

iyarkai unadhu ooviyam
inaiyillaadha kaaviyam
agilamennum aalayam
naanum adhil oor aagamam
ullam endhan ullam adhu
ennaalum un illame

idhayam ennum veenaiyil 
anbai meetum velaiyil
vasantha raagam kaetkave
aezhai ennil vaarume
thanthen ennai thanthen endrum
en vaazhvu unnodu dhaan

palipeedathil vaithen ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை 
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் 

நிலையில்லா இந்த பூவுலகில் 
நித்தம் உன் பாதையிலே 
நின் சித்தம் போல் உம் கரத்தால் 
நித்தம் வழி நடத்தும் 

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில் 
பரிசுத்தமாய் ஜீவிக்க 
பரிசுத்தமான உம் இரத்தத்தால் 
பரிசுத்தமாக்கி விடும் 

palipeedathil vaithen ennai
paavi ennai aetru kollum

nilaiyila indha poovulagil
nitham un paathaiyile
nin sitham pol um karathaal
nitham vazhi nadathum

parisutham illaa ivvulagil
parisuthamaay jeevika
parisuthamaana um rathathaal
parisuthamaaki vidum

naangal tharugindra kaanikai

நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே 
நாங்கள் தருகின்ற காணிக்கை 

நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம் 
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் 
காணிக்கையாக்கவே - இன்று 
உம்மை நாடினோம் 

வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி 
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் 
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை 
காணிக்கையாக்கவே - இன்று 
உம்மை நாடினோம் 

naangal tharugindra kaanikai idhai aetrarul dheyvame
naangal tharugindra kaanikai

nilaiyatra ulagam nilayena ninaithu nimmadhiyindri vaazhnthu vandhom
kaneer pookalai undhan paathathil kaanikai aakave indru ummai naadinom

valamatra vaazhvil vasanthathai thedi paavathai naangal aninthirunthom
anbin paathathil enthan vaazhvinai kaanikaiyaakkave indru ummai naadinom

dheiveega paliyil

தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே 
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன் 
காணிக்கை ஏற்றிடுவாய் 

வானம் காணும் ஒளியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
மேகம் சிந்தும் துளியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
இந்த நிலையில் எந்தன் வாழ்வை 
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம் 

வேதம் சொன்ன மொழியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
பாதம் படைத்த கனியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை இந்த நினைவில் எந்தன் வாழ்வை 
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம் 

dheiveega paliyil uravaadum dheyvame
unnodu paliyaaga naanum inaikindren
kaanikai aetriduvaay

vaanam kaanum oliyellaam en devan thantha kaanikai
megam sindhum thuliyellaam en devan thantha kaanikai
indha nilaiyil endhan vaazhvai
kaanikai thanthen un malar paadham

vedham sonna mozhiyellaam en devan thantha kaanikai
paadham padaitha kaniyellaam en devan thantha kaanikai
indha ninaivil endhan vaazhvai
kaanikai thanthen un malar paadham

tharuven kaanikai

தருவேன் காணிக்கை 
என்னை முழுமையாகவே - மனம் 
இங்கு மலராய் மலர்ந்து உன்னில் உயிராய் கலந்து 
தருவேன் உன்னன்பில் இணைந்து 

குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குமே 
இறைவா வருவாய் 
என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தேன் 
உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய் தினம் கொடுப்பேன் 

இரசத்துடன் நீர்த்துளிபோல் எனை சேர்த்து உம் இரத்தமாக்கும் 
அப்பத்தில் எழுவாய் 
மாற்றிடும் நல் திருவுணவாய் 
என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளித்தேன் 

tharuven kaanikai
ennai muzhumaiyaagave - manam
ingu malaraay malarnthu unnil uyiraay kalanthu
tharuven unnanbil inainthu

kuraigalaal nirantha en ullakarai neekume
iraivaa varuvaay
ennullam unnillam arinthen
ullathile ullathellaam unakkaay thinam koduppen

rasathudan neerthulupol enai saerthu um rathamaakkum
appathil ezhuvaay
maatridum nal thiruvunavaay
ennidathil aedhumillai unnidam ennai alithen

thanthen thanthen iraiva

தந்தேன் தந்தேன் இறைவா
என்னை தந்தேன் தந்தேன் தலைவா 
உள்ளது எல்லாம் உமக்காக 
உயர் பலியானாய் எனக்காக 
அதில் எம்மையும் இணைத்திடவா 

இயற்கை அழகு உந்தன் எழில் வண்ணம் 
அங்கு இருக்கும் வளங்கள் 
உந்தன் அருள் கோலம் 
கண்டேன் கண்டேன் உந்தன் கருணை உள்ளம் 
தினம் வந்தேன் வந்தேன் உந்தன் மலர் பாதம் 
தயவுடன் என்னையும் ஏற்றிடுவாய் - உம் 
பலியாய் என்னையும் மாற்றிடுவாய் 

இதழ்கள் விரிக்கும் நம் மலர் கூட்டம் 
எங்கும் இறைவன் இருப்பதை பறைசாற்றும்
என்றும் இன்றும் என் இயேசு தேவா 
நீ தங்கும் தங்கும் உள்ளம் இறைவன் இல்லம்
காணிக்கை பொருளாய் நான் மாறி 
உன் காலடி வந்தே சரணடைந்தேன்

thanthen thanthen iraiva
ennai thanthen thanthen thalaivaa
ulladhu ellam umakkaaga
uyar paliyaanaay enakkaaga
adhil emmaiyum inaithidavaa

iyarkai azhagu undhan ezhil vannam
angu irukkum valangal
undhan arul kolam
kanden kanden undhan karunai ullam
dhinam vandhen vandhen undhan malar paadham
thayavudan ennaiyum aetriduvaay - um 
paliyaay ennaiyum maatriduvaay

idhazhgal virikkum nam malar koottam
engum iraivan iruppadhai paraisaatrum
endrum endrum en yesu deva
nee thangum thangum ullam iraivan illam
kaanikkai porulaay naan maari
un kaaladi vandhe saranadainthen

thanthita porutkal

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து 
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் 

வழங்கிட கனியோ உணவோ இன்றி 
வாடிடும் வறியோர் பலர் இறைவா 
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி 
வேறேதும் இல்லா நிலை இறைவா 

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை 
உன்னருள் இவர்க்காய் கேட்கின்றோம் 
எங்கள் மனம்பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர் தம் 
மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம் 

thanthita porutkal yaavaiyum eduthu
thanthom thanthaay aetriduvaay

vazhangida kaniye unavo indri
vaadidum variyor palar iraiva
verum vizhineer viyarvai vedhanai andri
verethum illaa nilai iraiva

unakkena emmai vazhangidum velai
unnarul ivarkkaay ketkindrom
engal manamporum aatral anaithayum ivar tham
manathuyar neenga padaikindrom

kaiyalikkindren iraiva

கையளிக்கின்றேன் இறைவா - எந்தன் 
மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு 
கையளிக்கின்றேன் இறைவா 

வாழ்க்கையை விட எந்தன் வளமையை விட உந்தன் 
அருள் நிலை ஒன்றே மேலானது 
வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - எல்லா 
வரங்களையும் விட மேலானது 

செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன் 
இதயமும் உமதுமுன் நிறைவு பெறும் 
முழுமை என் உள்ளமதை நிரம்பிடவே - நாவில் 
மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும் 

kaiyalikkindren iraiva - endhan
meiyporul aavi anaithaiyum umaku
kaiyalikkindren iraiva

vaazhkaiyai vida endhan valamaiyai vida undhan
arul nilai ondre melaanadhu
vaazhkaiyil ummai vaazhthuvadhu - ellaa
varangalaiyum vida melaanadhu

sezhumaiyum kozhumaiyum peruvadhu pol endhan
idhayamum umadhumun niraivu perum
muzhumai en ullmadhai nirappidave - naavil 
magizhchiyin pugazhchiyin paadal ezhum

ezhai ennai kaanikaiyaaga

ezhai ennai kaanikaiyaaga tharugindren dheyvame
aetru kollume aetru kollume

en uyirum udalum ullamum 
sindhanaiyum seyalum - en
unarvugal uravugal ennil 
ulla thiramaigal
yaavum undhan karunaiyin kodaigal 
thanthaay aetrukkol

en kadantha kaala vaazhkaiyum
nigazhum vaazhkkaiyum - naan
edhir kollum vaazhkkaiyum
adhan valarchi thalarchiyum
yaavum undhan karunaiyin kodaigal 
thanthaay aetrukkol 

ஏழை என்னை காணிக்கையாக தருகின்றேன் தெய்வமே 
ஏற்று கொள்ளுமே ஏற்று கொள்ளுமே 

என் உயிரும் உடலும் உள்ளமும் 
சிந்தனையும் செயலும் - என் 
உணர்வுகள் உறவுகள் என்னில் 
உள்ள திறமைகள்
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 
தந்தாய் ஏற்றுக்கொள்

என் கடந்த கால வாழ்க்கையும் 
நிகழும் வாழ்க்கையும் - நான் 
எதிர் கொள்ளும் வாழ்க்கையும் 
அதன் வளர்ச்சி தளர்ச்சியும் 
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 
தந்தாய் ஏற்றுக்கொள்

ellaam konarndhom

எல்லாம் கொணர்ந்தோம் 
திருவடி வைத்தோம் 
ஏற்றிடுவாய் இறைவா - பலியாய் 
மாற்றிடுவாய் தலைவா 

அன்பும் அருளும் பண்பும் பாசமும் 
எல்லாம் நீ தந்தது 
வாழ்வும் வளமும் வளர்ச்சியும் தளர்ச்சியும் 
மகிழ்வுடன் நீ தந்தது 

சிந்தனை சொல் செயல் எந்தன் திறமைகள் 
எல்லாம் நீ தந்தது 
உடல் பொருள் ஆவி உணர்வுகள் எல்லாம் 
உவப்புடன் நீ தந்தது 

ellaam konarndhom 
thiruvadi vaithom
aetriduvaay iraivaa - paliyaay
maatriduvaay thalaivaa

anbum arulum panbum paasanum 
ellaam nee thanthathu
vaazhvum valamum valarchiyum thalarchiyum
magizhvudan nee thanthathu

sindhanai sol seyal endhan thiramaigal
ellaam nee thanthathu
udal porul aavi unarvugal ellaam
uvappudan nee thanthathu

ellaam tharugindren

எல்லாம் தருகின்றேன் தந்தாய் 
என்னையும் தருகின்றேன் 

இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே 
தருவேன் உமக்கு காணிக்கை 
உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை 
என்னோடு இணைத்தே தருகின்றேன் 

பிறருக்காக வாழ்வதில் நானும் 
என்னையே உம்மிடம் தருகின்றேன் 
பிறரின் சுமையை விரும்பி சுமக்க 
என்னையும் தகுதி ஆக்குவாய் 

ellaam tharugindren thanthaay
ennaiyum tharugindren

iyarkai eentha malargal parithe
tharuven umakku kaanikai
uzhaipin payanaai kidaitha porulai
ennodu inaithe tharugindren

pirarukkaaga vaazhvadhil naanum
enaiye ummidam tharukindren
pirarin sumaiyay virumbi sumakka
ennaiyum thaguthi aakkuvaay

unnidathil enna illai

உன்னிடத்தில் என்ன இல்லை 
என்னிடத்தில் ஒன்றும் இல்லை 
இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க 
ஏதொன்றும் சொந்தம் இல்லை 
பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை 

கண்களை நான் தந்திருப்பேன் 
கண்களுக்கோ பார்வையில்லை 
இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைப்பேன் 
உள்ளத்தில் ஞானம் இல்லை 
காய்ந்தே போனேன் 
கண்ணீரும் கண்ணில் இல்லை 

நெஞ்சுக்குள்ளே வந்துவிடு 
நிம்மதியை தந்து விடு 
நேசிக்க வந்த என் நெஞ்சத்தை சுத்தம் செய்
நெற்றிக்கு முத்தம் கொடு 

நீயே என்னை 
காணிக்கை பெற்று கொடு 
 

unnidathil enna illai
ennidathil ondrum illai
yesu un paathathil kaanikai naan vaikka
aedhondrum sondham illai
paavam seythen ennathil sutham illai 

kankalai naan thanthirupen 
kangaluko paarvaiyillai
iraivaa un paathathil ullathai naan vaipen
ullaththil gnaanam illai
kaayndhe ponen 
kanneerum kannil illai

nenjukkulle vandhuvidu
nimmadhiyai thandhu vidu
nesikka vandha en nenjathai sutham sey
netriku mutham kodu
neeye ennai 
kaanikai petru kodu

idhayam paadum iniya paadal

இதயம் பாடும் இனிய பாடல் இறைவா உமக்காக 
இகத்தில் காணும் படைப்பு யாவும் இறைவா எனக்காக 
நினைத்தேன் நினைத்தேன் நான் தர 
அனைத்தும் உந்தன் காணிக்கை 

பூத்துக் குலுங்கும் மலர்களும் இங்கு 
காய்த்து கனிந்த கனிகளும் - ஓங்கி 
உயர்ந்த மரங்களும் அதை சூழ்ந்து வளர்ந்த செடிகளும் 
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும் 
இறைவன் தந்த கொடைகளே

நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை 

பறந்து திரியும் பறவைகள் - அவை 
பாடும் கடல் வாழ் விலங்குகள் 
காற்றும் கடலும் கார்முகில் 
வான வில்லும் நிலவும் விண்மீன்களும் 
இயற்கை கூறும் கவிதைகள் - யாவும் 
இறைவன் தந்த கொடைகளே 
நினைத்தேன் நினைத்தேன் நான் தர
அனைத்தும் உந்தன் காணிக்கை 

idhayam paadum iniya paadal iraiva umakkaaga
ikathil kaanum padaipu yaavum iraivaa enakkaaga
ninaithen ninaithen naan thara 
anaithum undhan kaanikai

poothuk kulungum malargalum ingu
kaaythu kanintha kanikalum - oongi
uyarntha marangalum adhai soozhnthu valarntha sedigalum
iyarkai koorum kavidhaigal - yaavum
iraivan thantha kodaigalae
ninaithen ninaithen naan thara
anaithum undhan kaanikai

paranthu thiriyum paravaigal  avai
paadum kadal vaazh vilangugal
kaatrum kadalum kaarmugil
vaana villum nilavum vinmeengalum
iyarkai koorum kavidhaigal - yaavum
iraivan thantha kodaigalae
ninaithen ninaithen naan thara
anaithum undhan kaanikai

adiyor yaam tharum

அடியோர் யாம் தரும் காணிக்கையை 
அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே 

பாவியென்றெம்மை பாராமல் 
பாவத்தின் தீர்வையை அடையாமல் 
பரிகாரம் என ஏற்றிடுவாய் 
பலியாய் எமை நீ மாற்றிடுவாய் 

மேலொரு வாழ்வு உண்டு என்று  - எம் 
மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம் 
மேலும் துன்பங்கள் அடைந்தாலும் 
மேன்மை பலியாய் தருகின்றோம் 

adiyor yaam tharum kaanikaiyai
anbaay aerpaay aandavare

paaviyendremmai paaraamal
paavaththin theervaiyai adaiyaamal
parikaaram ena aetriduvaay
paliyaay emai nee maatriduvaay

meloru vaazhvu undu endru- em 
melezhum thunbathai marakindrom
melum thunbangal adainthaalum
menmai baliyaay tharukindrom

anbodu vandhom

அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம் 
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே - உம் 
பலியோடு சேர்ப்பாய் தூயவனே 

பொன்னான வாழ்வை புடமிட்டதாலே 
பூவாக மணம் வீச வைத்தோம் 
புதிரான வாழ்வே எதிரானதாலே 
பொலிவாக செய்வாய் ஆண்டவரே - உம் 
அருளோடு அணைப்பாய் மாபரனே 

அருளான வாழ்வு இருளானதாலே 
திரியாக எமை ஏற்றி வைத்தோம் 
திரியாக கருகி மெழுகாக உருகி 
பலியாக வைத்தோம் ஆண்டவனே 
ஒளியாக மாற்றும் தூயவனே 
 
anbodu vandhom kaanikkai thandhom
kanivodu aerpaay aandavare - um 
baliyodu saerpaay thooyavane

ponaana vaazhvai pudamittadhaale
poovaaga manam veesa vaithom
pudhiraana vaazhve edhiraanadhale
polivaaga seyvaay aandavare - um
arulodu anaippaay maabarane

arulaana vaazhvu irulaanadhaale
thiriyaaga emai aetri vaithom
thiriyaaga karugi mezhugaaga urugi
paliyaaga vaithom aandavane
oliyaaga maatrum thooyavane

anbin paliyaay erpaay

அன்பின் பலியாய் ஏற்பாய் - உன்னை 
அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய் 
அன்பின் பலியாய் ஏற்பாய் 
புண்படும் மனதின் துயர் தணிப்பாய் - எமை 
புண்ணிய வாழ்வில் நிலைபெற செய்வாய் 

வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் - அருள் 
வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் 
முழு முதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - எமை 
திருப்பலிப் பொருளாய்த் தருகின்றோம் 

படைப்பின் மீதே பரிவிருக்க - அந்த 
பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க 
படைப்பே உன்னால் மகிழ்ந்திருக்க - உனில் 
படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க 

anbin paliyaay erpaay - unnai
anukidum eliyavar venduthal kaetpaay
anbin paliyaay aerpaay
punpadum manathin thuyar thanippaay - emai
punniya vaazhvil nilaipera seyvaay

vaazhvin kodaigal perukindrom - arul
vallalun karunaiyil vaazhkindrom
muzhumudhal thalaivaa iranjukindrom - emai
thiruppali porulaay tharugindrom

padaippin meedhe parivirukka - andha
parivaal un magan uyir kodukka
padaippe unnaal magizhnthirukka - unil
padaithom thooymai nirainthirukka

yesuve ennudan nee pesu

ஏசுவே என்னுடன் நீ பேசு
என் இதயம் கூறுவதை கேளு
நானொரு பாவி ஆறுதல் நீ கூறு
நாள் முழுதும் என்னை வழிநடத்து

உன் திருப்பெயர் நான் பாடிடும் கீதம் உன் திரு இதயம் பேரானந்தம்  - (2)
உன் திரு வாழ்வெமக்கருளும்
உன் திரு நிழலில் நான் குடிகொள்ள என்றும் என்னுடன் இருப்பாய்

இயேசுவின் பெயருக்கு மூவுலகெங்கும் இணையடி பணிந்து தலை வணங்கிடுமே
ஏசுவே உன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க ஏசுவே உன் புகழ் வாழ்க
ஏசுவே நீ என் இதயத்தின் வேந்தன் என்னை தள்ளி விடாதே

yesuve ennudan nee pesu
en idhayam kooruvadhai kaelu
naanoru paavi aaruthal nee kooru
naal muzhuthum ennai vazhinadaththu

un thirupeyar naan paadidum geetham un thiru idhayam peraanandham - (2)
un thiru vaazhvemakarulum
un thiru nizhalil naan kudikolla endrum ennudan iruppay

yesuvin peyaruku moovulagengum iraiyadi panindhu thalai vanangidume
yesuve un pugazh vaazhga vaazhga vaazhga yesuve un vaazhga
yesuve nee en idhayathin vendhan ennai thalli vidaathe


anbe kadavul endraal

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல் 
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல் 

மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா 
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா 

இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா 
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா 

அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா 
மலை பெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா 

உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா 
என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா 

நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும் 
நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா 

anbe kadavul endraal anbukku eedaedhu sol
anbe inbam endraal anbukku inaiyaedhu sol

mannorgal mozhi pesinum anbukku eedaguma
vinorgal mozhi pesinum anbukku eedaguma

iraivaaku sol varamum anbukku eedaguma
marai porul unarporulum anbukku eedaguma

alavilla arivu thiran anbukku eedaguma
malai peyar visuvaasamum anbukku eedaguma

ulporul vazhangum thanmai anbukku eedaguma
en udal erippadhume anbukku eedaguma

nambikai visuvaasamum nilaiyay nindruvidum
nilaiyaay nirkum avai anbuku eedaguma