un pugazhai paaduvadhu

உன் புகழை பாடுவது என் வாழ்வின் இன்பமய்யா 
உன் அருளை போற்றுவது என் வாழ்வின் செல்வமையா 

துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய் 
கண்ணயர காத்திருக்கும் நல் அன்னையாய் அருகிருப்பாய் 
அன்பு எனும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய் 
உன் நின்று பிரியாமல் நீ என்றும் அணைத்திருப்பாய் 
நீ என்றும் அணைத்திருப்பாய் 

பல்லுயிரை படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய் 
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய் 
அன்பினுக்கு அடைக்கும் தாழ் ஒன்று இல்லை என்றுணர்ந்தேன் 
உன் அன்பை மறவாமல் நான் என்றும் வாழ்ந்திருப்பேன் 
நான் என்றும் வாழ்ந்திருப்பேன் 

un pugazhai paaduvadhu en vaazhvin inbamaya
un arulai potruvadhu en vaazhvin selvamayya

thunbathilum inbathilum nan thanthaiyaay neeyiruppaay
kannayara kaathirukum nal annaiyaay arugiruppaay
anbu ennum amuthathinai naan arundhida enakkalippaay
unnindru piriyaamal nee endrum anaithiruppaay

palluyirai padaithiruppaay nee ennaiyum aen padaithaay
paavathile vaazhnthirunthum nee ennaiyum aen azhaithaay
anbinukku adaikumthaazh ondru illai endrunarthen 
un anbai maravaamal naan endrum vaazhnthirupen