maathave saranam

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் 
கன்னி மாதாவே சரணம் 
மாபாவம் எம்மை மேவாமல் காவாயே அருள் ஈவாயே
கன்னி மாதாவே சரணம்

மாசில்லா மனமும் ஏசுவின் உள்ளமும் 
மாந்தரின் தவறால் நோவுரக்கண்டோம் -- (2)
ஜெபம் செய்வோம் தினம் ஜெபமாலை சொல்வோம் 
பாவத்திற்காக பரிகாரம் புரிவோம் -- (2)

நானிலத்தில் சமாதானமே நிலவ  
நாணமிலா சிலர் ஆணவம் ஒழிய -- (2)
இனி எமதுடல் ஆவி அனைத்துமே உமக்கே 
பணி புரிவோம் உமதாணையின் படியே  -- (2)
maathave saranam unthan paatharam puvikaatharam
kanni maathave saranam
maapaavam emmai maevaamal kaavaye arul ivayae
kanni maathave saranam

masilla manamum yesuvin ullamum 
maantharin thavaraal novurakandom - (2)
jebam seyvom thinam jebamaalai solvom
paavathirkaagha parigaaram purivom - (2)

naanilathil samaathaname nilava
naanamillaa silar aanavam ozhiya - (2)
ini emathudal aavi anaithume umakae
pani purivom umathaanaiyin padiye - (2)